வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த பேராசிரியை- வெளியான வீடியோ
மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்துக்கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மாணவனை திருமணம் செய்த பேராசிரியை
மேற்கு வங்கத்தின் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில், வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் திருமணம் செய்த வீடியோ வெளியானது.
இருவரும் மாறி மாறி நெற்றியில் குங்குமமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதோடு திருமணத்திற்கு சம்மதம் கூறி இருவரும் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வவருகிறது.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் விசாரணைக் குழுவை அமைத்தது.
இதுகுறித்து விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியை விடுப்பில் இருக்க பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
बंगाल के नदिया जिले में स्थित मौलाना अबुल कलाम आजाद प्रौद्योगिकी विश्वविद्यालय की प्रोफेसर ने फर्स्ट ईयर के छात्र से क्लासरूम में ही शादी रचा ली। वीडियो वायरल हुआ, तो यूनिवर्सिटी प्रशासन ने प्रोफेसर को छुट्टी पर भेज दिया। pic.twitter.com/aUTybYxJ0t
— Swaraj Srivastava (@SwarajAjad) January 29, 2025
இது தொடர்பாக பேராசிரியை"இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இது ஒரு திட்டத்தின் ஒரு பகுதி. ஃபிரெஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் திட்டமிட்டு நடத்திய நாடகம் இது. எனக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டது.
என் மீது அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் புகார் அளிப்பேன்," என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |