கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவி இரவில் தூக்கிட்டு தற்கொலை!
இரவு நேரத்தில் வீட்டில் உயிரை மாய்த்து கொண்ட கல்லுரி மாணவி
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை
தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி குப்பம்மாள். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் நிஷா (18) கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற பொலிசார் நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் அதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.