பிரித்தானியாவில் கோரமான சாலை விபத்து: சிறுமி பரிதாபமாக பலி: மற்றொருவர் காயம்
பிரித்தானியாவின் எசெக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.
பிரித்தானியாவில் சாலை விபத்து
இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள வடக்கு நோக்கிச் செல்லும் கொல்செஸ்டர் A12 சாலையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் மற்றும் கனரக லொறி இடையே நடந்த விபத்தில் மற்றொரு குழந்தை ஒன்றும் காயமடைந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை தொடர்ந்து அவசரகால குழுவினரும், விமான மருத்துவக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றொரு சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
இந்த விபத்து தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று எசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான டேஷ்காம் காட்சிகள் யாரேனும் வைத்திருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |