சொட்டைத் தலையில் முடி செழித்து வளர வைக்கும் குமட்டிக்காய்! சித்தர்கள் சொன்ன ரகசியம்
இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும் இருக்கிற பிரச்சினை தலைமுடி பிரச்சினை. கொத்து கொத்தாக முடி உதிர்ந்தால் சிலருக்கு மனவேதனையில் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.
30 வயதை கடக்காத சிலருக்கு கூட தலையில் சொட்டை விழுந்து விடும். முடி வளர வைக்க பல கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவார்கள்.
சிலர் முடி வளர்ச்சிக்கு மாத்திரைகளை கூட உட்கொள்வார்கள். இதையெல்லாம் செய்யவே வேண்டாம். சித்தர்கள் சொன்ன ரகசியக் காயான குமட்டிக் காய் ஒன்றே போதும். சொட்டைத் தலையில் கூட முடி செழித்து வளர்ந்துவிடும்.
முடி வளர்ச்சிக்கு சித்த வைத்தர்கள் சொன்ன குமட்டிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் -
குமட்டிக்காய் பார்ப்பதற்கு தர்பூசணிப்போல், பச்சை நிறத்தில், வெள்ள மற்றும் மஞ்சள் நிற கோட்டில் சின்ன உருண்டை வடிவில் அழகாக இருக்கும். ஆனால், இக்காய் பயங்கர கசப்புத்தன்மை கொண்டது.
இந்த காய் பெரும்பாலும் கிராமப்புறங்களில் பார்க்கலாம். இதை கொமட்டிக் காய், ஆற்றுத்தும்மட்டி காய், வரித்தும்பேய்க்குட்டி காய் என்று அழைப்பதுண்டு. பொதுவாக இந்த காய் வெப்பமண்டலங்களில் வளரக் கூடியது.
இந்த காயில் என்ன பவர் இருக்குன்னு தெரியுமா? குமட்டிக்காய் பூச்சி விரட்டியாகவும், மனித உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. நம் உடம்பில் கொப்புளங்கள் வந்தால் இக்காயை அரைத்து தடவினால் சரியாகிவிடும்.
முடி வளர
தலைமுடி உதிர்ந்தாலோ, வழுக்கை விழுந்தாலோ இந்தக் குமட்டிக்காயை அரைத்து வழுக்கை விழுந்த இடங்களில் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.
மேலும், பொடுகு தொல்லையைபோக்க இந்தக் குமட்டிக்காயை அரைத்து, தலையில் மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
ஒரு பாத்திரத்தில் தேய்காய் எண்ணெய்யை மிதமான தீயில் சூடுப்படுத்தில், அதில் அரைத்த குமட்டிக்காயை போட்டு, நன்றாக கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தேய்த்து வந்தால் நிச்சயம் வழுக்கை தலையில் முடி வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |