ட்ரோன் அத்துமீறலை தொடர்ந்து விமான சேவைகள் நிறுத்தம்: ஜேர்மன் விமான நிலையத்தில் பரபரப்பு
Cologne-Bonn Airport halts operation following the detection of drone: ட்ரோன் அத்துமீறலை தொடர்ந்து ஜேர்மனியின் கொலோன் பான் விமான நிலையத்தில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்
ஜேர்மனியின் கொலோன் பான விமான நிலையத்திற்கு அருகே அனுமதியின்றி ட்ரோன் விமானம் ஒன்று பறந்ததை அடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விமானப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 10.00 மணி அளவில் விமான நிலையத்திற்கு அருகே அனுமதியின்றி ட்ரோன் விமானம் தென்பட்டதாக அந்நாட்டின் DPA செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் இதையடுத்து உடனடியாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும், நள்ளிரவுக்கு பிறகே மீண்டும் விமான சேவைகள் வழக்கம் போல தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி நுழைந்த ட்ரோன் எங்கிருந்து இயக்கப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் இதுவரை கண்டறியவில்லை.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களையும் ஜேர்மன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் மறுத்துவிட்டது.