பிரான்ஸில் சைக்கிள் பந்தயத்தில் வீரருக்கு நேர்ந்த அசம்பாவிதம்: அதிர்ச்சி காணொளி
பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் கொலம்பியா வீரர் படுகாயமடைந்ததால் பாதியில் விலகினார்.
கொலம்பிய வீரர்
பிரான்ஸ், பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் நடந்து வரும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், கொலம்பிய வீரர் ஐனர் ரூபியோ (Einer Rubio) கலந்துகொண்டார்.
The crash of 🇨🇴 Einer Rubio from another angle...
— Domestique (@Domestique___) July 24, 2026
Read more:
📰 https://t.co/TjchzYFuDV
🎥 IG Pamezcycling pic.twitter.com/2Ay9VSFWIk
நேற்றைய 19-வது கட்டப் பந்தயத்தின்போது ரூபியோவிற்கு முன்பு சென்றுகொண்டிருந்த கார், பார்வையாளர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக திடீரென நின்றது.
இதனை சற்றும் எதிர்பாராத ஐனர் ரூபியோ காரின் பின்பக்க கண்ணாடியில் பலமாக மோதினார். இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட இரத்தம் கொட்டியது.
உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கிரெனோபில்லில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மேலாளர் பகிரங்க மன்னிப்பு
அங்கு அவரது காயங்களின் தீவிரத்தைக் கண்டறிய புதிய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரூபியோ மோதிய காரினை ஒட்டிய XRG அணியின் மேலாளர் ஜோக்சியன் பெர்னாண்டஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
எனினும், பார்வையாளர்களின் உயிரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாகவும் தெளிவுபடுத்தினார். ரூபியோவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |