இலங்கையின் தலைநகரில் ஏற்பட்ட பாரிய விபத்து; ஐவர் பலி - பலர் படுகாயம்
இலங்கையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஏற்பட்ட விபத்து
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடாளாவிய ரீதியில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், இன்று காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபெட்டி பிளாசாவுக்கு அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த குறித்த பேருந்து கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்த நிலையில், இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அத்துடன், காயமடைந்த 20 பேரில் 15 மாணவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Several persons injured & admitted to hospital after a tree fell on a Deniyaya bound bus from Colombo near Liberty junction in Kollupitiya.
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) October 6, 2023
Two trapped and police & Air Force personnel are trying to rescue them.#SriLanka #LKA #Traffic pic.twitter.com/dw46GUmSeb
Duplication Road…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |