காலி அணிக்கு மரண அடி கொடுத்த கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்! தெறிக்கவிட்ட பத்திரனா
காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பத்திரனாவின் மிரட்டல்
கொழும்பில் நடந்த LPL 2024 போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது.
End of Powerplay: Marvels at 37/2, losing openers Dickwella and Hales early. ??
— LPL - Lanka Premier League (@LPLT20) July 15, 2024
Can they bounce back? ?#LPL2024 pic.twitter.com/AZPm0eqtss
அதன்படி களமிறங்கிய காலி மார்வெல்ஸ் அணியில் டிக்வெல்ல 10 ஓட்டங்களிலும், ஹேல்ஸ் 3 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த சதீஷா ராஜபக்சே 15 ஓட்டங்களில் வெல்லேலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டிம் செய்பெர்ட் மற்றும் பனுக ராஜபக்சே கூட்டணி அமைத்தனர்.
Marvels All Out for 138! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 15, 2024
Strikers need 139 runs to confirm their place in the playoffs. Can they chase it down? ?#LPL2024 pic.twitter.com/ET8HNL4k6g
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் வெற்றி
அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்தபோது பனுக ராஜபக்சே 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, பத்திரனாவின் மிரட்டல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த காலி அணி 19.5 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Strikers reach 60/2, losing Gurbaz and Waseem early. ??
— LPL - Lanka Premier League (@LPLT20) July 15, 2024
Can they turn the tide? ?#LPL2024 pic.twitter.com/OaCqztb7jn
அதிரடி காட்டிய பனுக ராஜபக்சே 15 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் விளாசினார். பத்திரனா 4 விக்கெட்டுகளும், வெல்லேலகே மற்றும் ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முகமது வசீம் 50 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 31 ஓட்டங்களும் எடுத்தனர். உதானா, தீக்ஷணா மற்றும் சஹன் அராச்சிகே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Matheesha Pathirana ? dazzles with wickets for just 20 runs in 3.5 overs, earning the Player of the Match award! ?? #LPL2024 pic.twitter.com/wAMUyruGGA
— LPL - Lanka Premier League (@LPLT20) July 15, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |