ஷதாப் கானின் சுழலில் சிக்கிய ஜப்னா கிங்ஸ்! LPL 2024யில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் இமாலய வெற்றி
ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் வெற்றி பெற்றது.
மாயாஜால சுழற்பந்துவீச்சு
கொழும்பில் நடந்த LPL 2024 போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஜப்னா கிங்ஸ் அணி ஷதாப் கானின் மாயாஜால சுழற்பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களே சேர்த்தது.
Innings Break: The Kings post 109/9.
— LPL - Lanka Premier League (@LPLT20) July 14, 2024
Can the Strikers chase down 110 runs in 20 overs?
The stage is set for an exciting second half! #LPL2024 pic.twitter.com/nBHEnrBj2o
அதிகபட்சமாக விஜயகாந்த் வியாஸ்காந்த் 25 ஓட்டங்கள் எடுத்தார். ஷதாப் கான் 4 விக்கெட்டுகளும், பினுரா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும், திசாரா பெரேரா, பத்திரனா மற்றும் இசிதா விஜேசுந்தர தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Shadab Khan clinches Player of the Match for his exceptional 4-wicket haul! His stellar performance sealed the victory for Colombo Strikers.#LPL2024 #LPLPINKDAY #CSvsJK pic.twitter.com/wheC72h9z4
— LPL - Lanka Premier League (@LPLT20) July 14, 2024
இமாலய வெற்றி
அடுத்து களமிறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் 9.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் குவித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்களும், முகமது வசீம் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களும் விளாசினர்.
4 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷதாப் கான் (Shadab khan) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
??????????? ?????
— LPL - Lanka Premier League (@LPLT20) July 14, 2024
Gurbaz and Waseem forge a solid 50-run partnership! ??
The Strikers are on ??#LPL2024 pic.twitter.com/jbGnYQbN4M
The Colombo Strikers secured a convincing win by 9 wickets against the Jaffna Kings in Match 17 of the LPL2024. pic.twitter.com/4ysMtG5UwM
— LPL - Lanka Premier League (@LPLT20) July 14, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |