இந்தியாவிற்கு அச்சத்தை தோற்றுவித்துள்ள ஈழத்தமிழர்கள்: திட்டமிடும் அரசியல் நகர்வு
இலங்கை நிலப்பரப்பில் இருந்து ஈழ தமிழர் தாயகம் பிரிந்து சென்றால் அது தமிழ்நாட்டையும் பிரித்துவிடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இந்தியாவின் அமைதிப்படையினுடைய உளவுத்துறைக்கு பொறுப்பான கேர்ணல் ஹரிஹரன் எழுதிய கட்டுரையில் ஈழத்தமிழர்களை ஏளனமாக சித்தரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேர்ணல் எழுதிய கட்டுரையில், கொடுப்பதை வாங்கும் பிச்சைக்காரனின் நிலையிலேயே ஈழத்தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களின் நிலையை கண்டு தான் பரிதாபம் அடைவதாக ஏளனமாக எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து விரிவாக விளக்கத்தை பெற்றுக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |