சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யுங்கள்: அமெரிக்க கவுன்சிலரின் வித்தியாசமான கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ள நிலையில், அமெரிக்க கவுன்சிலர் ஒருவர் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யுமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க கவுன்சிலரின் வித்தியாசமான கோரிக்கை
அமெரிக்காவில் கொலராடோ மாகாண கவுன்சிலரான ஸ்டேசி கில்மோர் (Stacie Gilmore), சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யுமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Colorado City Councilmember Stacie Gilmore is asking people to report ICE's activities and real time locations so that illegal aliens can be warned. pic.twitter.com/AOM8JEqa8x
— Libs of TikTok (@libsoftiktok) February 4, 2025
யாராவது எங்காவது அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளைப் பார்த்தால், உடனே தகவல் கொடுத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யுமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் தனது 600 தன்னார்வலர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டேசி, இது நமது சமுதாயத்துக்கு சவாலான மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தும் நேரம்.
ஆகவே, புலம்பெயர்தல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளைப் பார்த்தால், பாதுகாப்பாக இருங்கள், உடனே தகவல் கொடுத்து உதவுங்கள் என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |