வீட்டை விற்றுவிட்டு சென்ற நபர்... ஃப்ரீசரில் பெண்ணின் உடல் பாகங்கள்: அம்பலமான பின்னணி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வீட்டின் ஃப்ரீசரில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மாயமான பெண்ணினுடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் உரிமையாளரின் மகள்
குறித்த 16 வயது பென் கடந்த 2005ல் மாயமானதாக கூறப்பட்டு வந்துள்ளது. தற்போது அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளரின் மகள் என்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரத்தை படுகொலை வழக்காக விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் Grand Junction அருகே அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றை வாங்கிய நபர், அந்த வீட்டில் இருந்த ஃப்ரீசரை ஒருவருக்கு அளித்துள்ளார்.
ஆனால் அந்த ஃப்ரீசருக்குள் மனித தலை ஒன்றும் அத்துடன் கைகளும் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து டி.என்.ஏ சோதனையில் அது Amanda Leariel என்பவரின் உடல் பாகம் என உறுதி செய்யப்பட்டது.
அமண்டா எவ்வாறு இறந்தார்
2005 ஏப்ரல் மாதம் முதல் அவர் மாயமானதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் மாயமானதாக புகார் அளிக்கப்படவே இல்லை. அமண்டா எவ்வாறு இறந்தார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை, அத்துடன் இந்த விவகாரத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை.
உண்மையில் அந்த வீடானது Bradley David என்பவருக்கு சொந்தமானது. அவர் 2021ல் கோவிட் பாதிப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |