உடனடியாக பிரித்தானியா திரும்பி வா... அரச குடும்பத்திலிருந்து இளவரசர் ஹரிக்கு பறந்த அவசர அழைப்பு! என்ன நடந்தது.. ஏதற்காக?
அமெரிக்காவில் உள்ள இளவரசர் ஹரி உடனடியாக பிரித்தானியாவுக்கு திரும்புமாறு அரசு குடும்பத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஹரி அவரை இறுதியாக சந்திக்க வேண்டும் என அரச குடும்பத்தினர் விரும்புகிறார்களாம்.
அரச குடும்ப நிகழ்வுகளை கண்காணிப்பவர்கள் வட்டாரம் கூறியதாவது, இளவரசர் பிலிப்-ன் உடல்நிலை குறித்து அரச குடும்பம் கவலை அடைந்துள்ளதால் ஹரி உடனடியாக நாடு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சத்தியமான இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை பக்கிங்காம் அரண்மனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பிரித்தானியா பொதுமக்களிடமிருந்து ஹரி-மேகன் தம்பதியை எப்படி பாதுகாப்பது மற்றும் எங்கு அமர வைப்பது என்பது குறித்து அரண்மனை அதிகாரிகள் தொடர்ந்து ஆசோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 16ம் திகதி லண்டனில் உள்ள King Edward VII’s மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர் பிலிப், மார்ச் 1ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
எதிர்வரும் ஜூன் 10ம் திகதி இளவரசர் பிலிப் தனது 100வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் அவர் பிரச்சினை ஏதும் இல்லாமல் சிகிச்சைக்கு பதிலளிப்பதாக கூறப்பட்டாலும், அவர் வயது காரணமாக அரச குடும்பத்தினரிடையே கவலை எழுந்துள்ளது.