இப்போ பேசு பார்க்கலாம்! பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து வீரரை கிழித்து தொங்கவிட்ட கோஹ்லி: கமெராவில் பதிவான காட்சி
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த லார்ட்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றது.
ஒரு கட்டத்தில் இப்போட்டியில் இங்கிலாந்து ஜெயித்துவிடும் என்று நினைத்த போது, பும்ரா மற்றும் ஷமியின் அற்புதமான ஆட்டத்தில், இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப முடிந்தது.
பேடிங்கில் மட்டுமின்றி பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து வீரர்கள், இந்திய வீரர்களை அதிகமாகவே ஸ்ட்லட்சிஜ் செய்தனர் என்று கூறலாம். பதிலுக்கு இந்திய வீரர்களும், இங்கிலாந்து வீரர்களை சீண்டினர்.
அந்த வகையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸின் போது புஜாரா மற்றும் ராஹானே ஜோடி சிறப்பான தடுப்பாட்டத்தை கொடுத்தது.
இதனால் இங்கிலாந்து அணியினர் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறினர். அப்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான Ollie Robinson, புஜாராவை சற்று சீண்டினார்.
Today Behaviour of Virat Kohli On his Peak✌️
— Rais Shehroz Khokhar (@RaisShehroz) August 16, 2021
What he Say In This Video?#indvsEng #ViratKohli pic.twitter.com/DUH28IGaJf
இருப்பினும் புஜாரா 206 பந்துகளை சந்தித்து 45 ஓட்டங்களில் வெளியேறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது களமிறங்கிய Ollie Robinson-ஐ இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி சீண்டினார்.
அது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அவர் பேட்டிங் ஆட வந்த போது, கோஹ்லி புஜாராவிடம் சொல்வது போல், உங்கள் ஆட்டம் போராக இருந்தது, சலிப்பாக இருந்தது.
ஆனால் இவர்கள் எப்படி இந்த டெஸ்ட் போட்டியில் இனி மீளப்போகிறார்கள், பெரிய வாய் பேசுவாயே, இப்போது பேசு என்பது போல் கமெண்ட் செய்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.