ஜேர்மனியில் கழிவறையில் சிக்கிக் கொண்ட இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகை: பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
Comedian Zarna Garg Trapped in Restroom in Berlin: இந்திய வம்சாவளி நகைச்சுவை நடிகர் சர்னா கார்க் ஜேர்மனியில் உள்ள கடை ஒன்றின் கழிவறையில் 1 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழிவறையில் சிக்கிக் கொண்ட நகைச்சுவை நடிகை
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகையும், வழக்கறிஞருமான சர்னா கார்க்(Zarna Garg) ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற ஹெர்மிஸ்(Hermes) கடை ஒன்றின் கழிவறையில் 1 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டதாகவும் ஆனால் கடையின் ஊழியர்கள் தன்னை காப்பாற்ற சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

எப்போது நகைச்சுவையான பதிவுகளை வெளியிடும் சர்னா, இந்த முறை தனக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சர்னா கார்க் பகிர்ந்த தகவல்
இந்த சம்பவம் ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கியதாக நினைத்தோம், கழிவறை கதவு பூட்டிக் கொண்டதும் முதலில் இது தொடர்பாக நகைச்சுவையாக ஒரு வீடியோ பதிவு செய்யலாம் என்று அவரது குழுவினரும் நினைத்துள்ளனர்.
ஆனால் நேரம் செல்ல பயம் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. கடையின் ஊழியர்கள் கதவை உடைக்கவும், தீயணைப்பு துறையினரை அழைக்கவும் மிகவும் தயக்க காட்டியதாகவும் சர்னா கார்க் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கார்க்கை பின்னால் விலகி இருக்குமாறு கத்திக் கொண்டே அவர்கள் கதவை உடைக்க முயற்சி செய்த போது அவசர அலாரம் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் நிலைமை மேலும் பீதியடைய தொடங்கியுள்ளது. இறுதியில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பிரத்யேக கருவிகளை பயன்படுத்தி கதவை உடைத்து சர்னா கார்க்கை கிட்டத்தட்ட 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு பின்னர் பத்திரமாக வெளியே மீட்டனர்.
வெளியே வந்த பிறகு கடை ஊழியர்கள் தன்னிடம் எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், சமாதானப் பரிசாக ஒரு பாட்டில் ஷாம்பெயின் தந்ததாகவும் ஆனால் அதனை வாங்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |