காமெடி நடிகர் லொள்ளு சபா ஆண்டனி காலமானார்
விஜய் டிவியில் 2003 - 2008 காலக்கட்டத்தில் ஒளிபரப்பட்ட லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
லொள்ளு சபா ஆண்டனி
சந்தானம், ஜீவா, மனோகர் உள்ளிட்ட பல நடிகர்களின் வாழ்க்கையில் இந்த தொடர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில் இந்த தொடரில் நடித்து கவனம் பெற்றவர் லொள்ளு சபா ஆண்டனி. சந்தானத்துடன் இனைந்து, சில படத்தின் காமெடி காட்சிகளிலும் லொள்ளு சபா ஆண்டனி நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டனி, அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சந்தானம் மற்றும் நடிகர் சேஷு உள்ளிட்ட சிலர் உதவினர்.
அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, இன்று அதிகாலை அவர் மரணமடைந்துள்ளார்.
அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |