காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்
தமிழ் திரைப்பட உலகின் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ ஷங்கர் (46) வியாழக்கிழமை (செப் 18) காலமானார்.
ஒரு படப்பிடிப்பின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரத்த அழுத்தம் மாறுபட்டதால் மருத்துவர்கள் அவரை கவனமாக கண்காணித்துவந்தனர். ஆனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து, சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.
இந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் தனது சுமுக வலைதளத்தில் உருக்கமான அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர்
— Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2025
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
ரோபோ ஷங்கர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கொடிகட்டிப் பறந்தவர். பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
அவரது தனித்துவமான பேச்சுமுறை, உடல்மொழி மற்றும் நேர்த்தியான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அவரது மறைவு தமிழ் சினிமா உலகில் ஒரு இழப்பாகவே பார்க்கப்படுகிறது. திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |