வலி தாங்க முடியாமல் ரூட் ரன் ஓடுவதை பார்த்து குலுங்க குலுங்க சிரித்த ரிக்கி பாண்டிங்! கமெராவில் சிக்கிய காட்சி
அடிலெய்டில் நடைபெற்று வரும் 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ரூட், வலியில் ரன் எடுக்க ஓடுவதை பார்த்து வர்ணையாளர் அறையில் இருந்த ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் சிரித்து முகம் சுழிக்க வைத்துள்ளது.
அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஆஷஸ் டெஸ்ட் அடிலெய்டில் இரவு-பகல் போட்டியாக டிசம்பர் 16ம் திகதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்து போது டிக்ளர் செய்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு சுருண்டது.
இன்று நான்காவது நாள் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது.
நான்காவது நாள் போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வயிற்றில் தாக்கியதால், அவர் நான்காவது நாள் பீல்டிங் செய்ய வரவில்லை.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடி வந்த அவுஸ்திரலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்து போது டிக்ளர் செய்து, இங்கிலாந்து வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
468 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
ரோரி பர்னஸ் (34), ஹமீத் (0), மலான் (20), ஜோ ரூட் (24) ரன்களில் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸின் 41 ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்து, பேட்டிங் செய்த ஜோ ரூட் அடிவயிற்றில் பலமாக தாக்கியது.
இதில், வலிதாங்க முடியாமல் ரூட் கீழே சரிந்து துடித்தார், மருத்துவர்கள் குழு விரைந்து வந்து ஜோ ரூட்டை பரிசோதனை செய்தனர்.
Bit more retro commentary.
— Jason Ford (@TheFordFactor) December 19, 2021
This time Bill Lawry and Rod Marsh commentating on Joe Root's unfortunate delivery.
? Foxsports#Ashes #ENGvAUS #JoeRoot #AshesTest pic.twitter.com/1SehWuyX5H
எனினும், வலியுடன் ஜோ ரூட் பேட்டிங்கை தொடர்ந்தார். அதே ஸ்டார்க் ஓவரில் பந்தை தட்டி விட்டு ஜோ ரூட் ரன் எடுக்க ஓடியதை பார்த்து, வர்ணையாளர்கள் அறையில் இருந்த ரிக் பாண்டிங் உட்பட 3 வர்ணையாளர்களும் குலுங்க குலுங்க சிரித்தனர்.
Absolute scenes in the commentary box, completely losing it watching Joe Root run ? #Ashes pic.twitter.com/0CoJCSPTKD
— 7Cricket (@7Cricket) December 19, 2021
இது ரசிகர்களை பலரை முகம் சுழக்க வைத்தது. எனினும், தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட், ஸ்டார்க் வீசிய நான்காவது நாளின் கடைசி ஓவரில் ஆவுட்டானார்.
2வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 386 ரன்களும், அவுஸ்திரேலிய வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவை.