யாழ்.வருகையால் சீனாவிற்கே ஆபத்து! இந்திய முன்னாள் கேணல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
2000 கிலோமீட்டர் கடந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள இலங்கைக்கு சீனர்கள் வருகை தந்துள்ளமையானது சீனர்களுக்கே ஆபத்து என இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலின் பேசுப்பொருளாக மாறியுள்ள சீனா,இந்திய விவகாரங்கள், இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களுக்கு சீனர்களை பிடிக்காது என்ற கருத்து தொடர்ச்சியாக நிலவிவருகின்றது.பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு சீனா கரம் கொடுத்தால் சீனர்கள் மீதான துவேசத்தை குறைக்கும் அனுகுமுறையாக காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழிற்கு சீனர்கள் வருகை தந்தமையால் இந்தியா குறித்து சீனர்களே பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் ஒரு போதும் இல்லாத அளவு 2021 ஆண்டு இந்திய,சீனா பொருளாதார, வர்த்தக வணிக உறவுகள் அதிகரித்துள்ளது.இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன்,பெருமளவு ஆயுதங்களையும் வாங்கியுள்ளது.
அரசியல்,எல்லை பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு வியாபாரம் ரீதியிலாக நாம் பயன்பெறலாம் என்பதே சீனாவின் கொள்கை.ஜனநாயக நாட்டில் இதனை பார்க்க முடியாது.இவற்றினையே இலங்கை விடயத்திலும் சீனர்கள் கையாளுகின்றனர்.
இந்தியாவுடன் உறவு வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இலங்கைக்கும் எமக்கும் இடையிலான உறவில் யாராவது தலையிட்டால் பாடம் புகட்டுவேன் என சீனா துதுவர் சென்னையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியாவிற்கு அருகில் உள்ள இலங்கையின் தமிழர் பகுதியான யாழிற்கு சீனர்கள் வருகை தந்துள்ளமையானது சீனர்களுக்கே ஆபத்தாக அமையுமே தவிர ஒருபோதும் அவை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறாது என்றும் தெரிவித்துள்ளார்.