வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் மூன்றாம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்
வவுனியா மாவட்டத்தில் 10 ஆம் ஆண்டு தொடக்கம் 13ஆம் ஆண்டு வரையிலான அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
6 மாதங்களின் பின்னர் கல்வி நடவடிக்கை ஆரம்பமான நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள விபுலானந்தா கல்லூரியும் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பமானது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களின் வரவு அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மழை காரணமாக சற்று குறைவடைந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.