மாத தொடக்கத்தில் குறைந்தது வணிக சிலிண்டர் விலை.., புதிய விலை எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை குறைப்பு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று இந்திய அரசு தெரிவித்திருந்தது.
அந்தவகையில் எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானம் செய்கின்றன. அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் இந்த விலையானது ரூ.1,823.50 என இருந்தது. அதேபோல, வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |