இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு 8 போட்டிகளில் விளையாட தடை! நீங்கியது சிக்கல்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒல்லி ராபின்சன் 8 போட்டிகளில் விளையாட கிரிக்கெட் ஒழுங்கு ஆணையம் தடை விதித்துள்ளது.
27 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ராபின்சன், சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
ஜூன் 2ம் திகதி இங்கிலாந்து அணிக்காக முதல் நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது, ராபின்சன் தனது 18 மற்றும் 20 வயதிற்குள் இருந்தபோது, 2012 மற்றும் 2014 ஆண்டுக்கு இடையில் இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை தொர்டபில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய ட்விட்-கள் வெளிச்சத்திற்கு வந்தன.
இதுகுறித்த நடந்த விசாரணையின் போது ராபின்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஜூன் 30ம் திகதி நடந்த விசாரணைத் தொடர்ந்து, ராபின்சன் 8 போட்டிகளில் விளையாட கிரிக்கெட் ஒழுங்கு ஆணையம் தடை விதித்துள்ளது.
அதில் 3 போட்டிகளில் உடனடியாக தடை விதிக்கவும், 5 போட்டிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தடை விதிக்க வேண்டும் என கிரிக்கெட் ஒழுங்கு ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், ராபின்சனுக்கு 3,200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணையின் போதே ராபின்சன் 3 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இந்த 3 போட்டிகளை தடை விதிக்கப்பட்ட போட்டிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், ராபின்சன் தற்போது தனது கிரிக்கெட் வாழக்கையை தொடங்க எந்த தடையும் இல்லை.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி தேர்வில் ராபின்சன் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது