நிர்வாணமாக ஜூம் கூட்டத்தில் பங்கேற்ற கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரைத் தொடர்ந்து மற்றொருவர் செய்துள்ள மோசமான செயல்
கடந்த ஆண்டு ஜூம் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிர்வாணமாக கமெராவில் தோன்றி கோப்பை ஒன்றில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
Will Amos (47) என்னும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில், லிபரல் கட்சியைச் சேர்ந்த Shafqat Ali (55) என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் கனேடிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள கழிவறை ஒன்றிற்குள் இருந்து நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கழிவறைக்குள் செல்லும் காட்சிகளை நேரலையில் கண்ட சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளார்கள்.
அவர் தனது கமெராவை கழிவறையிலுள்ள சுவரில் வைத்துவிட்டு கழிவறையைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டு நடந்ததை உறுதிசெய்துகொண்டதைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த சபாநாயகரும் Shafqat Aliயை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஆனால், நடந்த சம்பவத்துக்கு Shafqat Ali மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதையடுத்து, அந்த சம்பவம் முடித்துவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.
இந்நிலையில், இதுபோன்ற விரும்பத்தகாத விடயங்களை தவிர்க்க, காணொளி கூட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.