புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த புலம்பெயர் பின்னணிகொண்டவரையே நியமிக்கும் பிரித்தானிய உள்துறைச் செயலர்
பிரித்தானியாவில் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த புலம்பெயர் பின்னணி கொண்ட ஒருவரையே நியமிக்க உள்ளது பிரித்தானிய அரசு.
முன்னாள் உள்துறைச் செயலரின் சகோதரர்
பிரித்தானியாவில் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த, புலம்பெயர் பின்னணி கொண்டவரான முன்னாள் உள்துறைச் செயலரான சாஜித் ஜாவிதின் சகோதரரையே நியமிக்க உள்ளது பிரித்தானிய அரசு.
யார் இந்த ஜாவித்?
முன்னாள் உள்துறைச் செயலரான சாஜித் ஜாவிதின் சகோதரர் Bas Javid, தற்போது பொலிஸ் இணை ஆணையராக உள்ள நிலையில், புலம்பெயர்தல் அலுவலகத்தில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
Credit: Twitter
அவருக்கு புலம்பெயர்தல் அலுவலகத்தில் டைரக்டர் ஜெனரல் என்னும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த Bas Javid, பாகிஸ்தான் வம்சாவளியினர் ஆவார். அவரது பெற்றோர் 1960களில், பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜாவித் சகோதார்களின் தந்தை, பிரித்தானியாவுக்கு வந்து, அங்கு பேருந்து சாரதியாக பணி செய்தார். பின்னர் அவரது குடும்பத்தினர் Bristolக்கு குடிபெயர்ந்து அங்கு கடை ஒன்றை நடத்திவந்தார்கள்.
Credit: PA
ஆக, புலம்பெயர்தல் பின்னணிகொண்ட ஜாவித் சகோதரர்களில் ஒருவர் முன்பும், மற்றொருவர் இப்போதும் தீவிரமாக புலம்பெயர்ந்தோருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார்கள். Bas Javidக்கு இந்த பொறுப்பை வழங்கிய இந்நாள் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேனும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |