TVS XLயில் பதுங்கியிருந்த கட்டுவிரியன்..அடுத்து நேர்ந்த பரிதாபம்
தமிழக மாவட்டம் விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு தீண்டியதில், நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகரின் சிவகாசியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருத்தங்கல் பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்தார்.
நேற்றைய இரவு வெங்கடேசன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அவர் தனது இருசக்கர வாகனத்தை (TVS XL) இயக்கியபோது, அதன் முன்பகுதியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு வெங்கடேசனை தீண்டியுள்ளது.
அவரது கையில் பாம்பு கடித்ததாக கூறப்பட்ட நிலையில், சரிந்து விழுந்த வெங்கடேசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். பின்னர் வெங்கடேசன் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |