இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... பலரும் அறிந்திடாத விடயம்
ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் இஞ்சியை பயன்படுத்தும் போது நீங்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் அதன் சத்துக்களை இழக்க வைக்கின்றது. அந்த வகையில் நாம் செய்யக்கூடாத செயல்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி
இஞ்சி சமையலுக்கு மட்டுமின்றி நாட்டு வைத்திய மருந்துகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியினை அள்ளிக் கொடுக்கின்றது.
அதுமட்டுமின்றி உணவில் இஞ்சியினை சேர்ப்பதால் அதன் சுவையும் அதிகரிக்கின்றது. சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சியில் டீ போட்டு குடிப்பதால் நல்ல ஒரு பலனை பெறலாம்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் இஞ்சிக்கு ஒரு தனி இடம் உள்ளது. இஞ்சி அசைவ உணவுகளுக்கு மட்டுமின்றி, டீ, கஷாயம், சூப் இவற்றிற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.
ஆனால் இஞ்சியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் இஞ்சியில் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறிய சிறிய தவறுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இஞ்சியில் செய்யக்கூடாத தவறுகள்
சமையலுக்கு நீங்கள் இஞ்சியை பயன்படுத்தும் போது அதிக தீயில் நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகமாக சமைக்கும் போதோ, வறுக்கும் போது அதிலுள்ள இயற்கையான சத்துக்கள் அழிந்துவிடுவதுடன், அதன் சுவை மற்றும் நன்மைகளும் குறைந்துவிடுகின்றது. ஆகவே லேசான தீயில் ஒரு சில நொடிகள் வைத்து சமைத்தால் போதுமானது.
அதே போன்று நன்மைகள் அதிகமாக கிடைக்கின்றது என்பதால் ஒரே நேரத்தில் அதிகப்படியான இஞ்சியை பயன்படுத்துவது தவறாகும். இவை வயிற்றுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதுடன், உணவின் சுவையும் குறைகின்றது. ஆகவே அசிடிட்டி மற்றும் வயிறு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மிதமான அளவில் பயன்படுத்துவது சிறந்தது.

மேலும் பழைய மற்றும் காய்ந்து சுருங்கி போன இஞ்சியை தவிர்க்கவும். ஏனெனில் இதன் மணம், வீரியம் குறைவாக இருப்பதுடன், உணவின் சுவையையும் குறைத்துவிடுகின்றது. ஆகவே சமையலுக்கு தேவையான இஞ்சியை அவ்வப்போது வாங்கி பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும்.
இஞ்சியின் தோலை மிகவும் ஆழமாக சீவுவது அதன் சுவையை குறைக்கின்றது. அதாவது தோலுக்கு மிக அருகில் இருக்கும் பகுதியில் சுவையும், நன்மையும் அதிகமாகவே இருக்கின்றது. ஆகவே கத்தியைக் கொண்டு சீவாமல், ஸ்பூன் கொண்டு அதன் தோலை மட்டும் நீக்கி சமைத்தால் சத்துக்கள் வீணாகாமல் தடுக்கலாம்.

சமையலுக்கு இஞ்சியை தவறாக நேரத்தில் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இவை சுவையை மாற்றிவிடுமாம். அதாவது பருப்பு, காய்கறி சமைக்கும் போது அதற்கு முன்னதாகவே இஞ்சியை சேர்த்தால், அதன் தனித்துவமான கார சுவை குறைந்துவிடும். அதே நேரம் சமையலின் முடிவில் சேர்த்தால் மிகவும் காரமாக மாறிவிடும். ஆகவே சரியான நேரத்தில் சேர்த்து சமைக்கவும். ஆரம்பத்தில் லேசாக வதக்கி சேர்க்கலாம்