கனடாவில் சமூக பரவலானது Omicron! நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு வலியுறுத்தல்
கனடாவில் Omicron மாறுபாடு சமூக பரவலாக மாறியுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்துள்ளார்.
புதிய Omicron மாறுபாடு பற்றிய கவலைகள் காரணமாக கனடா 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடைகளை முன்பே அமல்படுத்தியது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, வெளிநாடுகளுக்கு பயணிக்க இது சரியான நேரம் இல்லை என்பதை நான் மிகவும் தெளிவாக சொல்கிறேன்.
கனடாவில் Omicron சமூக பரவலாக மாறியுள்ளது. 10 மாகாணங்களுக்கு கூடுதலாக மில்லியன் கணக்கான கொரோனா தடுப்பூசி டோஸ் மற்றும் ரேபிட் பரிசோதனை கருவிகளை அரசாங்கம் அனுப்பி வருகிறது என தெரிவித்தார்.
சமூகத்தில் கொரோனா தொற்று யாரிடம் இருந்து, யாருக்கு பரவியது? என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை ஏற்படுவதுதான் சமூக பரவல் ஆகும்.
சமூக பரவல் வந்துவிட்டால் தொடர்புகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கொரோனா பரவல் மிக அதிகமாகிவிடும்.
இதனிடையே, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தடுப்பூசி போடவும், Omicronனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் Ontario கொரோனா அறிவியல் ஆலோசனை குழுவின் இயக்குனர் Peter Jüni வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் மக்கள் அலட்சியமாக இருப்பது என்னை மிகவும் கவலையடைச் செய்துள்ளது.
Omicron பாதிப்பு லேசானதாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், இது யதார்த்தமான அணுகுமுறை அல்ல என Peter Jüni தெரிவித்துள்ளார்.