மான்செஸ்டர் யுனைடெட்டிற்கே அதிர்ச்சி கொடுத்த குட்டி அணி
Como beat manchester united fc: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கோமோ அணியிடம் மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வியடைந்தது.
ஸ்டடியோ கியூசெப்பே சினிகக்லியா மைதானத்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் கோமோ அணிகள் மோதின.
கோமோ அணி
ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே கோமோ அணியின் நிகோ பாஸ் கோல் அடித்தார். அதற்கு பதில் கோல் அடிக்க முதல் பாதி வரை மான்செஸ்டர் யுனைடெட் போராடியது.
ஆனால், ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் கோமோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்திய கோமோ அணியில் அனஸ்டாசியோஸ் டௌவிகாஸ் 49வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அதிர்ச்சி தோல்வி
அதனைத் தொடர்ந்து, நிகோ பாஸ் 57வது நிமிடத்தில் இரண்டாவது கோலினை அடித்தார். 76வது நிமிடத்தில் ஜேகோபோ ரமோன் கோல் அடித்தார்.
இறுதியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜோஷுவா 90+1வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இறுதியில் கோமோ அணி 4-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெடை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
