1,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப சுவிஸ் நிறுவனம் ஒன்று முடிவு
சுவிஸ் நிறுவனம் ஒன்று 1,000க்கும் அதிகமான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
சுவிஸ் மருந்து தயாரிக்கும் நிறுவனமான Novartis, சுவிட்சர்லாந்தில் ஏராளமானோர் வேலையிழக்க உள்ளதை உறுதி செய்துள்ளது.
உலகம் முழுவதிலுமாக தனது நிறுவனத்தில் பணி செய்யும் 8,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக ஏப்ரலில் Novartis நிறுவனம் அறிவித்திருந்தது. அதில் 1,100 பேர் சுவிட்சர்லாந்திலுள்ள Novartis நிறுவனத்தில் பணி செய்பவர்கள். அதாவது, சுவிட்சர்லாந்தில் Novartis நிறுவனத்தில் பணி செய்வோரில் சுமார் 10 சதவிகிதம் பேர் வேலையிழக்கிறார்கள்.
Novartis நிறுவனம், 2024 வாக்கில் ஒரு பில்லியன் டொலர்களை சேமிக்க விரும்புவதால் இந்த நடவடிக்கையை எடுக்கிறது.
நிதி, மனித வளம், சட்டம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பணி புரிவோரே பெருமளவில் வேலையிழக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.