ஒரே நாளில்... வெறும் 6 மணி நேரத்தில் ரூ 36,430 கோடியை இழந்த பிரபல நிறுவனம்
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் காரணமாக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதுண்டு.
லாபத்தில் 2.33 சதவீதம்
இந்த நிறுவனங்களின் பங்குகளும் சமீப நாட்களில் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் வியாழக்கிழமை மட்டும் அனைவரின் பார்வையும் ஒரே ஒரு நிறுவனத்தின் மீது திரும்பியது.
அது Hindustan Unilever Ltd நிறுவனம். செப்டம்பரில் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 2.33 சதவீதம் சரிவடைந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து அதன் பங்குகளின் மதிப்பு சுமார் 6 சதவீதம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதாவது HUL நிறுவனத்தின் பங்குகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிறுவனங்களிலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. HUL நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெறும் 6.15 மணி நேரத்தில் ரூ.36,430.41 கோடி குறைந்து ரூ.5,88,090.94 கோடியாக பதிவானது.
HUL நிறுவனம்
பகல் 9.15 முதல் மதியத்திற்கு மேல் 3.30 மணி வரையான சந்தை நேரத்தில் இது நடந்துள்ளது. சென்செக்ஸ் வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை சுமார் 5.83 சதவீதம் சரிவடைந்து ரூ 2,502.95 என பதிவானது. நிஃப்டி வர்த்தகத்தில் 5.81 சதவீதம் சரிவடைந்து, ரூ 2,504.75 என பதிவானது.
இருப்பினும், செப்டம்பர் காலாண்டில் விற்பனை வருவாய் 2.36 சதவீதம் உயர்ந்து ரூ.15,703 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.15,340 கோடியாக இருந்தது.
இந்தியாவில் Surf, Rin, Lux, Pond's, Lifebuoy, Lakmé, Brooke Bond, Lipton, Horlicks உள்ளிட்ட தயாரிப்புகளை HUL நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |