தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு

Prison
By Arbin Aug 07, 2025 10:13 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

கருணைத் தொகை

ஆனால் அந்த தொகையானது நியாயமற்றது மற்றும் அநியாயம் என குறித்த பெண்ணின் சட்டத்தரணி நிராகரித்துள்ளார். தற்போது 58 வயதாகும் கேத்லீன் ஃபோல்பிக் என்பவர் கடந்த 2003ல் தனது பிள்ளைகள் நால்வரை படுகொலை செய்ததாக நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு | Compensate Woman Wrongly Jailed 20 Years

ஆனால் குழந்தைகள் நால்வரும் இயற்கை காரணங்களினாலோ அல்லது மரபணு மாற்றத்தினாலோ இறந்திருக்கலாம் என்பதற்கான புதிய அறிவியல் ஆதாரங்களை ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு கண்டறிந்ததை அடுத்து அவர் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, 2023 இல் அவரது தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஜூலை 2024 இல் ஃபோல்பிக்கின் இழப்பீட்டு கோரிக்கையை விரிவாகப் பரிசீலித்த பிறகு, மாகாண நிர்வாகம் அவருக்கு கருணைத் தொகையை வழங்க முடிவு செய்ததாக அரசு சட்டத்தரணி மைக்கேல் டேலி தெரிவித்தார்.

இஸ்ரேல், பிரித்தானியா உட்பட 19 நாடுகள்... புதிய அபாயகரமான ஏவுகணையை வாங்க ஆர்வம்

இஸ்ரேல், பிரித்தானியா உட்பட 19 நாடுகள்... புதிய அபாயகரமான ஏவுகணையை வாங்க ஆர்வம்

ஆனால், இந்தப் பணம் மிகவும் நியாயமற்றது மற்றும் அநீதியானது என்றும், இது ஃபோல்பிக் அனுபவித்த வலி மற்றும் துன்பத்தின் அளவைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவரது சட்டத்தரணி ரானி ரெகோ தெரிவித்துள்ளார்.

ஃபோல்பிக் தனது குழந்தைகளை மட்டுமல்ல, தனது வாழ்க்கையின் சிறந்த 20 ஆண்டுகளையும் இழந்தார், மேலும் அந்த அதிர்ச்சியின் நீடித்த விளைவுகளை தொடர்ந்து உணர்ந்தார் என்று ரெகோ கூறினார்.

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு | Compensate Woman Wrongly Jailed 20 Years

விசாரிக்க வேண்டும்

ஃபோல்பிக்கின் 19 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான குழந்தைகள், 1989 முதல் 1999 வரையிலான 10 வருட காலப்பகுதியில் இறந்தனர். போதுமான ஆதாரங்கள் இல்லாத போதிலும், ஃபோல்பிக் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் கழுத்தை நெரித்து கொன்றதாக அரசு தரப்பு முன் வைத்த வாதத்தின் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு | Compensate Woman Wrongly Jailed 20 Years

அவரது 40 ஆண்டு சிறைத்தண்டனை பின்னர் 30 ஆகக் குறைக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது உள்ளூர் நாளேடு ஒன்று அவரை அவுஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட பெண், மற்றும் கொடூரமான தாயார் உள்ளிட்ட வாசகங்களால் அடையாளப்படுத்தியது.

தற்போது மாகாண நிர்வாகம் அவருக்கு வழங்க முன்வந்துள்ள ரூ 11 கோடி எழப்பீடானது எந்த முறையில் முடிவு செய்யப்படுகிறது என்பதை விசாரிக்க வேண்டும் என ஃபோல்பிக் கோரிக்கை வைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US