சுவிஸில் இழப்பீடு கேட்டு போக்குவரத்து நிறுவனத்திடம் குவிந்த 8,600 மனுக்கள்
சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட தாமதங்களுக்கு ஒரே மாதிரியாக ஈடுசெய்ய புதிய பயணிகள் உரிமையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மாறுதலானது 2021 ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், 2021 ஜூன் வரையான காலகட்டத்தில் மொத்தம் 8,600 மனுக்கள் இழப்பீடு கேட்டு போக்குவரத்து நிறுவனத்திடம் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகள் தங்களுக்கான நிறுத்தத்தில் 60 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் 25 விழுக்காடு இழப்பீடு அளிக்கப்படுகிறது. காத்திருப்பானது 2 மணி நேரத்திற்கும் மேலானால், அவர்கள் வாங்கிய பயணச் சீட்டில் 50 விழுக்காடுக்கு மேல் இழப்பீடு அளிக்கப்படுகிறது.
தற்போது குவிந்துள்ள 8,600 மனுக்களில் 79 சதவீத மனுக்கள் மட்டுமே ஏற்கும் வகையில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, பொதுப் போக்குவரத்துத் துறை ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 74,000 பிராங்குகள் இழப்பீடு வழங்கியது.