பிரித்தானிய பிரதமருக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு: உருவாகிறார் போட்டியாளர்
பிரித்தானிய பிரதமருக்கு அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு உருவாகிவருகிறது.
கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு
அடுத்த தேர்தலில் லேபர் கட்சி போட்டியிடும்போது, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் கட்சியின் தலைவராக இருக்கக்கூடாது என லேபர் கட்சியைச் சேர்ந்த பாதிக்கும் மேலானோர் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய ஆய்வொன்றில், லேபர் கட்சியினரில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே ஸ்டார்மர் கட்சித் தலைவராக நீடிக்கவேண்டும் என விரும்புவதும் தெரியவந்துள்ளது.
லேபர் கட்சியினரில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர், ஸ்டார்மர் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்றும் 65 சதவிகிதம் பேர் லேபர் கட்சி தவறான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உருவாகிறார் போட்டியாளர்
ஏற்கனவே சமீபத்திய ஆய்வொன்று நாளை தேர்தல் நடத்தினால் Reform கட்சித் தலைவரான Nigel Farageதான் பிரதமராவார் என கணித்துள்ளது.
இது போதாதென்று, ஸ்டார்மரின் போட்டியாளரான, அடுத்து லேபர் கட்சியின் தலைவராகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் Andy Burnhamக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகிவருகிறது.
சமீபத்திய ஆய்வொன்றில், Andy Burnhamக்கு மக்கள் ஆதரவு 50 புள்ளிகளாக இருக்கும் நிலையில், ஸ்டார்மருக்கோ 40 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆக, ஸ்டார்மர் கடும் அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |