இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை மீது பெண்கள் புகார்: பிரான்ஸ் தரப்பிலிருந்தும்
இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை தங்களை சீரழித்ததாக சில பெண்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, 150க்கும் அதிகமான பெண்கள் அவர் மீது குற்றச்சாட்டுகளை தெரிவிக்க முன்வந்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பில், தற்போது பிரான்சிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன,
இளவரசி டயானாவின் காதலரின் தந்தை
Getty Images
1997ஆம் ஆண்டு ஜூலை மாதம், எகிப்து நாட்டு திரைப்படத் தயாரிப்பாளரான டோடி என்பவரைக் காதலிக்கத் துவங்கினார் டயானா.
டயானாவின் காதலரான, அந்த டோடியின் தந்தை மீதுதான் பெண்கள் பரபரப்புக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
புகழ்பெற்ற Harrods என்னும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தின் உரிமையாளராக இருந்தவரும், இளவரசி டயானாவின் காதலர் டோடியின் தந்தையுமான அந்த சர்ச்சைக்குரிய நபரின் பெயர், முகமது ஃபயத் (Mohamed Fayed).
பிரான்ஸ் தரப்பிலிருந்தும் ஒலிக்கத் துவங்கியுள்ள குரல்கள்
பிரித்தானியாவிலுள்ள Harrods என்னும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தின் உரிமையாளராக இருந்தபோது, தான் பணிக்கமர்த்தும் இளம்பெண்கள் தன்னிடம் நெருக்கமாக பழகும் வகையில் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஃபயத்.
அதேபோல, ஃபயத் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Ritz ஹொட்டலில் தன்னிடம் அத்துமீறியதாக Kristina Svensson என்னும் பெண் புகாரளித்துள்ளார்.
அவரைப்போலவே, பிரான்சிலும் ஐந்து பெண்கள் ஃபயத் தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, பிரான்சிலும் ஃபயத் மீது வழக்கு விசாரணை துவக்குமாறு அடுத்த வாரத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக Kristinaவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |