ஏ.ஆர்.ரஹ்மான் மீது பொலிஸில் புகார்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்பணமாக பெற்ற ரூ.29.50 லட்சத்தை திருப்பி தரவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடு
கடந்த 2018ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.50 லட்சம் முன்பணம் நிகழ்ச்சி ரத்தானதால் இன்னும் திருப்பி தரப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன்! இறுதியாக ஆசிர்வதிக்கப்பட்டேன்..கோலாகமாக நடந்த பிரபல நடிகையின் திருமணம்
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்துள்ள புகாரில், மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அனுமதி கிடைக்காததால், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி நடைபெறாமல் போனது.
நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.50 லட்சத்தை திரும்பக் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், முன்பணத்தை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் அதனை திருப்பி தரவில்லை.
மேலும், அவர் தரப்பில் அளிக்கப்பட்ட காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |