பிரித்தானியாவில் இடமொன்றை..மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றிய புலம்பெயர்ந்தோர்
Motorists complained on migrants in berkshire town: பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர்.
பிரித்தானியாவில் வீடற்ற புலம்பெயர்ந்தோரும், போதைக்கு அடிமையானவர்களும் நகர மையத்தில் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர்.
வாகன நிறுத்துமிடம்
பெர்க்ஷயர் நகரத்தின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு நேர் கீழே அமைந்துள்ள ரீடிங்கின் சிவிக் பி வாகன நிறுத்துமிடத்தில், குறைந்தது பன்னிரண்டு ஆண்கள் தற்காலிக வீடுகளை அமைத்துள்ளனர்.
இந்த சிதிலமடைந்த, கரடுமுரடான கட்டிடக்கலை பாணிக் கட்டிடத்தை, ஒவ்வொரு நாளும் வழக்கறிஞர்களும், நூற்றுக்கணக்கான கடைக்காரர்களும் பயன்படுத்துகின்றனர்.
இங்கு ஒரு மணி நேரத்திற்கான கட்டணம் சமீபத்தில் 2.10-லிருந்து 4.30 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. இது நகராட்சி நடத்தும் பரபரப்பான வாகன நிறுத்துமிடம் ஆகும்.
போதைக்கு அடிமையானவர்கள்
கடைக்காரர்கள் இப்பகுதியில் வீடற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் குழுவுடன் தங்கள் இடத்தை பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆனால், அவர்களோ ஒரு மணிநேரத்திற்கு 4 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்துமிடத்தை, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்கள் பெரும்பாலும் முதல் தளத்திலேயே முடங்கியுள்ளனர்; அங்கு கடைக்கு வருபவர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி நடந்து செல்ல வேண்டும் - மேலும் அவர்கள் தரைத்தளத்தில் கார்களுக்கு அருகிலும் உறங்குகிறார்கள்.
இது மிகவும் மோசமான நிலைதான்
இப்பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் ஜான்சன் என்ற நபர், "நான் மேற்கு லண்டனில் வசித்து வந்தேன்; ஆனால் சில சிக்கல்களில் சிக்கியதால் இங்குக் குடிபெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது மிகவும் மோசமான நிலைதான். ஆனால் என்ன செய்ய முடியும்? இங்கே ஒரு குறிப்பிட்ட சூழல் நிலவுகிறது; போதைப்பொருட்கள் உட்பட உங்களுக்குத் தேவையான எதையும் எளிதாக பெற்றுக்கொள்ள முடிகிறது" என்கிறார்.
Reading Borough Council அந்த இடத்தில் வசிப்பது "பாதுகாப்பானது அல்ல" என்று குறிப்பிடும் சுவரொட்டிகளை அங்கு ஆங்காங்கே ஒட்டியுள்ளது.
இருப்பினும், அந்த இடத்தை வசிப்பிடமாகப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள், அந்த வாகன நிறுத்துமிடத்தின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
