பிரித்தானியா பிரதமர் போரிஸின் ஆளுமை பிம்பத்தை உடைத்து தவிடு பொடியாக்கிய முன்னாள் தலைமை ஆசோசகர்!
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆளுமை பிம்பத்தை பிரதமரின் முன்னாள் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் தவிடுபொடியாக்கியுள்ளார்.
சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு குழுவுடனான கூட்டத்தில் பிரித்தானியா பிரதமரின் முன்னாள் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் பங்கேற்றார்.
கொரோனா குறித்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பதிலளித்த கம்மிங்ஸ், பிரித்தானியா அரசியல் அமைப்பின் மீது மிகவும் ஆழமான கேள்வி உள்ளது.
போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெர்மி கோர்பின் இருவரில் ஒருவரை, மக்களை தேர்ந்தெடுக்க விட்ட எந்தவொரு அமைப்பும் வெளிப்படையாக மிகவும் மோசமான தவறானது என்று கூறினார்.
இந்த இருவரையும் விட சிறந்த தலைமையை வழங்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் உள்ளனர்.
போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றிருப்பது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரை விட சிறந்த தலைமையை வழங்க முடியும் என்றும் டொமினிக் கம்மிங்ஸ் கூறினார்.
எனது தனிப்பட்ட கருத்தில் நான் அத்தகைய மூத்த பதவியில் இருந்திருக்க வேண்டும் என்பது முற்றிலும் பைத்தியகரமானது.
நான் புத்திசாலி இல்லை, நான் உலகில் பெரிய சாதனைகளை படைக்கவில்லை, நான் அப்பதவியில் இருந்தேன் என்பது முற்றிலும் முட்டாள்தனமானது என்பதை போலவே, போரிஸ் ஜான்சன் பதவியில் இருப்பது முட்டாளதனமானது.
எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமான அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் மூத்த நிர்வாக வேலைகளில் இருந்து அவர்களை களையெடுக்க இந்த அமைப்பு முனைகிறது.
இந்த நெருக்கடியில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் மீண்டும் மீண்டும் சிங்கங்களான (அதிகாரிகள்) என்ற கழுதைகள் (அரசியல்வாதிகள்) வழிநடத்துகிறது என டொமினிக் கம்மிங்ஸ் விமர்சித்தார்.