ஹரியுடன் சமரசம் செய்துகொள்வது நல்லது: ராஜ குடும்பத்தை வலியுறுத்தும் நிபுணர்கள்
பிரித்தானிய ராஜ குடும்பம் ஹரியுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள் ராஜ குடும்ப நிபுணர்கள்.
குறுகிப்போன ராஜ குடும்பம்
மன்னர் சார்லஸ் தான் பதவியேற்றதும், பொறுப்பு வகிக்கும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்தார்.
ஆனால், எதிர்பாராமல் அவரும் இளவரசி கேட்டும் உடல் நலம் பாதிக்கப்பட, அரசுப் பணிகளை மேற்கொள்ள போதுமான ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, இளவரசர் வில்லியம், இளவரசி ஆன் ஆகியோருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஹரி ராஜ குடும்பத்தில் பொறுப்பு வகித்திருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
ஹரியுடன் சமரசம் செய்துகொள்வது நல்லது
இந்நிலையில், தற்போது மீண்டும் ராஜ குடும்பம் ஹரியுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என ராஜ குடும்ப நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
2027ஆம் ஆண்டு, ஹரி பொறுப்பேற்று நடத்தும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன.
வேறுபாடுகளை மறந்து ராஜ குடும்ப உறுப்பினர்கள் அந்த போட்டிகளைக் காணச் செல்லவேண்டும், அவர்கள் தங்களுடன் இணைந்துகொள்ள ஹரிக்கும் அழைப்பு கொடுக்கவேண்டும் என அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்படிச் செய்வது ராஜ குடும்பத்துக்கு நல்லது, அது பொதுமக்கள் மத்தியில் ராஜ குடும்பத்தின் இமேஜை உயர்த்தும் என்கிறார்கள் அவர்கள்.
ராஜ குடும்பத்தினரைப் போன்ற மரியாதைக்குரிய நபர்களால் வேறுபாடுகளை மறந்து சமரசம் செய்துகொள்ளமுடியும் என்றால், அது தங்களாலும் முடியும் என்னும் செய்தியை அது பொதுமக்களுக்குக் கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.
அது மக்களுக்கு நல்ல முன்மாதிரியாக அமையும் என்பதால், மீண்டும் ராஜ குடும்பம் ஹரியுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என ராஜ குடும்ப நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |