பாடசாலைகளில் கட்டாய கொரோனா சோதனை: கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சுவிஸ் பெற்றோர்
பாடசாலைகளில் கொரோனா பலவல் அதிகரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தின் Zug மண்டலத்தில் கொரோனா சோதனைகளுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Zug மண்டலத்தில் உள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 22ம் திகதிக்கு பின்னர் இரண்டாம் நிலை மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் இருமுறை, உமிழ்நீர் மூலம் இந்த சோதனை முன்னெடுக்க Zug மண்டல சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
சோதனைகள் இதுவரை தொடங்கப்படாத நிலையில், பல பெற்றோர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் மண்டல கல்வித்துறை நிர்வாகம், பெற்றோர்களின் எதிர்ப்பை ஏற்க மறுத்ததுடன், சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் மாணவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, Zug மண்டல நிர்வாகத்தின் இந்த முடிவை நிபுணர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நோய்வாய்ப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், தொற்றுநோய்கள் அல்லது தொற்றுநோயாக இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம், ஆனால் முழு ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது முறையான செயலா எனவும் அவர் வினவியுள்ளார்.
மட்டுமின்றி, பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஜுக் அரசாங்கத்தால் இதைச் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.