ஜேர்மன் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி அளிக்கும் அரசின் திட்டம்: நீதிமன்றத்தின் முடிவு என்ன?
ஜேர்மன் சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதரவாக ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
ஜேர்மனியில் முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் முதலியவற்றில் பணி செய்வோர், பிரசவம் பார்ப்பவர்கள், பிஸியோதெரபிஸ்டுகள் என அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் ஒன்றில் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் அல்லது சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பது அவசியம் என விதி ஒன்று மார்ச் 15 அன்று அமுலுக்கு வர உள்ளது.
அதைத் தள்ளிவைக்குமாறு எதிர்ப்பாளர்கள் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
ஆனால், சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமா என்பது ஜேர்மன் சட்டப்படி அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதா என்பதை முடிவு செய்ய அரசு கோரியிருந்த நிலையில், திட்டமிட்டபடி, சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கலாம் என ஜேர்மன் அரசியல் சாசன நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.