பிப்ரவரி 15 முதல் 33 நாடுகளிலிருந்து பிரித்தானியா வருவோருக்கு ஹொட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தல்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
புதிதாக திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு திட்டமிட்டுள்ள கட்டாய தனிமைப்படுத்தல் திட்டம், பிப்ரவரி 15ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.
அதன்படி, இனி அபாய நாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ள 33 நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோர், 11 இரவுகள், அதாவது 10 நாட்களுக்கு ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஒருவருக்கான தங்கும் கட்டணம் 800 பவுண்டுகள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக அமைச்சர்கள் நாடு முழுவதும் உள்ள ஹொட்டல்களில் 28,000 அறைகளை முன்பதிவு செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 15 முதல், நாளொன்றிற்கு 1,425 பயணிகளை தங்கவைப்பதற்கு தயாராக இருக்குமாறு ஹொட்டல் உரிமையாளர்களை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக Daily Telegraph பத்திரிகை தெரிவித்துள்ளது.