சுவிட்சர்லாந்தில் மீண்டும் அமுல்படுத்தப்பட இருக்கும் கட்டுப்பாடு?
மாஸ்க் அணியும் கட்டுப்பாட்டை மீண்டும் அமுல்படுத்த மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
ஆனால், மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அரசியல்வாதிகள் தயக்கம்
காட்டுகிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கவேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அழைப்பு விடுக்கத் துவங்கியுள்ளனர்.
Ticino மாகாண தொற்றுநோயியல் துறை நிபுணரான Andreas Cerny, மாஸ்க் அணிதல் நல்ல பலனுள்ளது என நிரூபணம் ஆகியுள்ளதாகவும், மருத்துவமனைகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Omicron வகை கொரோனா வைரஸ் குறைவான அளவிலேயே உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், அது இதற்கு முன் உருவான மரபணு மாற்ற வைரஸ்களை விட அதிக அளவில் தொற்றக்கூடியது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த அரசியல்வாதிகள் தயங்குகிறார்கள். சுவிஸ் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Andreas Glarner, சிலரை பாதுகாப்பதற்காக, அனைவருக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்.