பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்: சுவிட்சர்லாந்தில் நிலைமை என்ன?

Switzerland
By Balamanuvelan Oct 15, 2026 08:36 AM GMT
Report

Concerns for a supermarket Swiss cyber attack: பிரான்சில் பல்பொருள் அங்காடிகள் மீது நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதல், சுவிட்சர்லாந்திலும் அது குறித்த கவலையை உருவாக்கியுள்ளது.

பிரான்சில் குளிர் சாதன அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்திலும் அதே அமைப்புகள் உள்ளதால் சுவிட்சர்லாந்தில் நிலைமை என்ன என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை இரவு துவங்கி, பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. 

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்: சுவிட்சர்லாந்தில் நிலைமை என்ன? | Concerns For A Supermarket Swiss Cyber Attack

அதாவது, ஹேக்கர்கள் குளிர்சாதனப்பெட்டிகள், உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளின் வெப்பநிலையை 50 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகின.

உணவுப்பொருட்கள் கெட்டுப்போனதால், அவற்றை முழுமையாக குப்பையில் வீசவேண்டிய நிலை உருவானதுடன், வெப்பநிலை அதிகமானதால் சில இடங்களில் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன. 

கணவனுடைய கடன் மனைவி தலையில்... முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு

கணவனுடைய கடன் மனைவி தலையில்... முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு

பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகள் பாதிக்கப்பட்டதால், ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நிலைமை என்ன?

பிரான்சில் பாதிப்புக்குள்ளான குளிர் சாதன அமைப்புகள், Danfoss என்னும் டென்மார்க் நிறுவனத்துக்கு சொந்தமானவை.  

விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்திலுள்ள Migros பல்பொருள் அங்காடிகள் சிலவற்றிலும் அதே Danfoss நிறுவனத்தின் குளிர் சாதன அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. 

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்: சுவிட்சர்லாந்தில் நிலைமை என்ன? | Concerns For A Supermarket Swiss Cyber Attack

இந்நிலையில், தங்கள் பல்பொருள் அங்காடிகளில் எந்த வித சைபர் தாக்குதலும் இல்லை என Migros நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல, Coop பல்பொருள் அங்காடிகளும், தங்கள் குளிர் சாதன அமைப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது, பிரான்சிலுள்ள குளிர் சாதன அமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக முடியும் என்றால், மற்ற நாடுகளிலும் அதே நிலை ஏற்படலாம் என்றும், மருத்துவமனைகள் முதலான அமைப்புகளும் பாதிப்புக்குள்ளாகக்கூடும் என்றும் ஒருவித அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை! 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US