65 பெண்களுக்கு தபாலில் அனுப்பப்பட்ட முகம் சுளிக்க வைக்கும் பொருள்
அவுஸ்திரேலிய நகரம் ஒன்றில் வாழும் 65 பெண்களுக்கு, மிக ஆபாசமான விடயங்கள் எழுதப்பட்ட கடிதங்களும், அவற்றுடன், யாரோ பயன்படுத்திய ஆணுறைகளும், தபாலில் அனுப்பப்பட்டுள்ள விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
65 பெண்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வாழும் Bree Walker என்ற பெண்மணிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. கடிதத்தைப் பிரித்துப் பார்த்த Bree கடும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.
அந்தக் கடிதத்தில் வாய் கூசும் அளவுக்கு, படிக்க இயலாத வகையிலான ஆபாசமான விடயங்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன், யாரோ பயன்படுத்திய ஆணுறைகளும் அந்தக் கடிதத்தில் இணக்கப்பட்டிருந்தன.
அதிர்ச்சியில் தூங்கக்கூட முடியாத நிலைக்கு ஆளான Bree, தன் தோழிகளை தொலைபேசியில் தொடர்புகொள்ள, அப்போதுதான், தனக்கு மட்டுமல்ல, தன் தோழிகள் அனைவருக்குமே அத்தகைய கடிதங்கள் அனுப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது.
அந்த பெண்களுக்குள் என்ன ஒற்றுமை?
விடயம் என்னவென்றால், அந்த 65 பெண்களுமே, அந்த நகரத்திலுள்ள Kilbreda College private girls' school என்னும் பள்ளியில் 1999ஆம் ஆண்டில் படித்தவர்கள்.
ஆக, யாரோ ஒருவர், பள்ளியின் ஆண்டுவிழா புத்தகத்திலிருந்து தங்கள் முகவரிகளை எடுத்திருக்கக்கூடும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கருதுகிறார்கள்.
இந்த விடயம் குறித்து பொலிசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், பல பெண்களுக்கு இதே போல பலமுறை கடிதங்களும் ஆணுறைகளும் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமையன்றும் தனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததாக பெண் ஒருவர் புகாரளித்துள்ள நிலையில், யார் இந்த மோசமான வேலையில் ஈடுபட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.