என்னுடைய அதிரடிக்கு இதுவே காரணம்! இங்கிலாந்தை கதறவிட்ட ஷர்தூல் தாகூர் வெளிப்படை பேட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நான் சிறப்பாக விளையாடியதற்கு என்ன காரணம் என்பதை ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றாலும், இதில் முக்கிய காரணமாக ஷர்துல் தாகூரின் ஆட்டத்தைக் கூறலாம்.
முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இவர், இரண்டாவது இன்னிங்ஸின் போது, இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில், இந்த போட்டியில் ஷர்தூல் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் குறித்து கூறுகையில், இந்த போட்டியில், பேட்டிங்கில் 100 ஓட்டங்களுக்கு மேல் அடித்தது மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய இந்த சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம், நான் வைத்துள்ள நம்பிக்கை தான், எப்போதுமே என்னுடைய பேட்டிங் மீது நம்பிக்கை வைத்திருப்பேன்.
பவுலிங் போடுவதற்கு எந்த அளவிற்கு பயிற்சி எடுக்கிறேனோ, அதே அளவிற்கு பேட்டிங்கிற்கும் பயிற்சி எடுத்து வருவேன். அதைத தவிர பேட்டிங்கில் சில நுட்பமான விஷயங்களை, அதாவது எப்படி டிரைவ் ஆடுவது போன்ற விஷயங்களை கற்று வருகிறேன்.
இதுவே என்னை பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வைக்கிறது என்று கூறியுள்ளார்.