தந்தைக்கு லொட்டரியில் கிடைத்த பரிசுத்தொகை... பிரித்தானிய குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்
பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் பெருந்தொகை பரிசாக கிடைத்துள்ளது.
அவர் அந்த தொகையில் ஒரு பவுண்டு கூட தன் பிள்ளைகளுக்குக் கொடுக்காததால் குடும்பமே பிரிந்துபோய்விட்டது.
பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் விழுந்த பரிசால் அவரது குடும்பமே சின்னாபின்னமாகியிருக்கிறது.
Northamptonshireஐச் சேர்ந்த அலெக்ஸ் ராபர்ட்சனும் அவரது சக சாரதிகளுமாக சேர்ந்து வாங்கிய லொட்டரிச் சீட்டுக்கு 38 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.
நண்பர்கள் அந்தத் தொகையை பகிர்ந்துகொண்டபோது, ஆளுக்கு 3.1 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளன.
அலெக்சுக்கு இரண்டு பிள்ளைகள். அலெக்ஸ் ஜூனியர் (45) மற்றும் வில்லியம் (44).
Credit: SWNS:South West News Service
இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாக பெற்ற அந்த தந்தை, மகன்களுக்கு 200 சிகரெட்களை மட்டுமே கொடுத்துள்ளார், ஒரு பவுண்டு கூட கொடுக்கவில்லையாம்.
இதனால் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வில்லியம் தன் தந்தைக்கு மிரட்டல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தந்தை தங்களுக்கு ஒரு பவுண்டு கூட தராமல் ஏமாற்றியதால் கோபமடைந்த பிள்ளைகள் இருவரும், அவரது கார் கண்ணாடியை சுத்தியலால் அடித்து உடைத்துவிட்டு, பொலிசில் சரணடைந்துள்ளார்கள்.
Credit: PA:Press Association
வழக்கு, தொடர்ந்த நிலையில், ஜாலியாக ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுவிட்ட தந்தை அலெக்ஸ், இந்த வழக்குக்காக பிரித்தானியாவுக்கு பறந்துவரவேண்டியுள்ளதே என்று எண்ணி பிரித்தானியாவுக்கு திரும்பி வராததால், அந்த வழக்கு கைவிடப்பட்டுள்ளது.
ஆக, அந்த லொட்டரி பரிசால் குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது என்கிறார், அலெக்ஸ் ஜூனியர்.
இப்படி லொட்டரியில் பரிசு விழுந்ததால் பிரிந்தது அலெக்ஸ் குடும்பம் மட்டுமல்ல. சமீபத்தில் லொட்டரியில் பரிசு விழுந்ததும், லாரா என்ற பிரித்தானியப் பெண், தனக்கு வீட்டில் இடம் கொடுத்த தன் காதலரான Kirk என்பவரைக் கழற்றி விட்டது நினைவிருக்கலாம்!