மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழா திட்டத்தில் குழப்பம்: காரணங்கள் ஒன்று இரண்டல்ல...
மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழா நெருங்கிவரும் நிலையில், அது குறித்த திட்டங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம்?
குழப்பத்திற்கான காரணங்கள் ஒன்று இரண்டல்ல. முதலாவது, இளவரசர் ஹரியும் மேகனும் முடிசூட்டுவிழாவிற்கு வருவது குறித்து இன்னமும் தகவல் தராததால், விருந்தினர்களை அமரவைப்பதற்கான இருக்கைகளை ஒழுங்கு செய்வதில் பிரச்சினை உள்ளது.

Image: Getty Images
அடுத்ததாக, 100 மில்லியன் மக்கள் பார்க்கும் விழாவில், மன்னர் அணியவிருக்கும் நீண்ட அங்கி தடுக்கி, அவர் விழுந்துவிடுவாரோ என்ற ஒரு அச்சம் நிலவுகிறது.

Image: Getty Images
மேலும், விழா மண்டபத்திற்கு வரும் பெண்கள், ராணி கமீலா வருவதற்கு முன்பே மண்டபத்திற்கு வந்துவிடுவார்கள். ஆனால், ராணி வருவதற்கு முன் அவர்கள் தங்கள் தலைகளில் tiara என்னும் கிரீடம் போன்ற நகையை அணியலாமா என்ற ஒரு குழப்பம் நிலவுகிறது.
மொத்தத்தில், மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவிற்கு சுமார் 25 நாட்களே இருக்கும் நிலையில், அது குறித்த திட்டங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Image: PA

Image: Getty Images

Image: Getty Images

Image: UK Press via Getty Images