இண்டியா கூட்டணிக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்
இந்துத்துவா சக்திகளை அழிக்க விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
விஜய்க்கு அழைப்பு
முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்தநாளை தினத்தை ஒட்டி, அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், "இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவரது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார்.
எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நாம் அழித்து விடலாம். ஆனால், அவர் இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்.
அது தான் அவருடைய கொள்கைக்கும், கட்சிக்கும் நல்லது. இதனை நான் யதார்த்தமான இந்தியாவின் குடிமகனாக சொல்கிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |