கேரளா நிலவரம்: 20 தொகுதிகளில் 19ல் காங்கிரஸ் முன்னிலை
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் 20 தொகுதிகளில் 19ல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஏப்ரல் 26ம் திகதி ஒரே கட்டமாக கேரளாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 71.27 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களிலும், கேரள காங்கிரஸ் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
இதே போல தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பாஜக 16 இடங்களிலும், பாரத் தர்ம ஜன சேனா 4 இடங்களிலும் போட்டியிட்டன.
தற்போதைய நிலவரப்படி, 20 தொகுதிகளில் 19ல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.