திடீரென பெண் அதிகாரியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்ட காங்கிரஸ் எம்பி
பெண் அதிகாரியின் நெற்றியில் காங்கிரஸ் எம்பி குங்குமம் வைத்து விட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்பி
இந்திய மாநிலமான கர்நாடகா, சாம்ராஜ்நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்போஸ். இவர் மைசூருவில் உள்ள பிரசித்திபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு வந்தார்.
இவருடன் சுற்றுலா துறை இணை இயக்குனர் சவிதா மற்றும் சில அதிகாரிகளும் வந்தனர். அப்போது காங்கிரஸ் எம்பி சுனில்போஸ் மற்றும் பெண் அதிகாரி சவிதா ஆகிய இருவரும் அம்மனை தரிசித்தனர்.
பின்னர், அம்மன் சன்னதி முன்பு சுனில் போஸ் எம்பி திடீரென அதிகாரி சவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டார். இதனை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதற்கு முன்னதாக, சுனில்போஸ் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தன்னுடைய தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது, அதிகாரி சவிதாவுடன் இருக்கும் சுனில்போஸ் புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் ஆதாரமாக கொடுத்து இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிவித்தனர். அதற்கு சுனில்போஸ் மறுத்தார்.
தற்போது, சவிதாவின் நெற்றியில் காங்கிரஸ் எம்பி குங்குமம் வைத்துவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |